[நேரலை] 14-05-2019 தென்னிலை | அரவக்குறிச்சி இடைத்தேர்தல் Seeman Speech Today Aravakurichy Thennilai

Loading...
23 Views

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Published
செய்திக்குறிப்பு: ஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி) | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

பத்தாம் நாளான நேற்று 13-05-2019 திங்கட்கிழமை மாலை 05 மணியளவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் மு.அகல்யா அவர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் கடைவீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் செக்காரக்குடி பொட்டலூரணி சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொண்டார்.

ஒட்டப்பிடாரம் கடைவீதி: https://www.youtube.com/watch?v=geO6coRAjPY

செக்காரக்குடி: https://www.youtube.com/watch?v=7Y_0W2J0lMw

பதினொன்றாம் நாளான இன்று 14-05-2019 செவ்வாய்க்கிழமை மாலை 05 மணியளவில் *அரவக்குறிச்சி* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் *ப.கா.செல்வம்* அவர்களை ஆதரித்து *தென்னிலை பேருந்து நிலையம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *வேலாயுதம் பாளையம் (Roundtana)* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* அவர்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.

பனிரெண்டாம் நாளான இன்று 15-05-2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில் *சூலூர்* சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் *மொ.வெ.விஜயராகவன்* அவர்களை ஆதரித்து செஞ்சேரி மலை, சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் *சூலூர், அண்ணா சீரணி கலையரங்கம், பேருந்து நிலையம் அருகில்* நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு: https://www.youtube.com/c/NaamThamizharKatchi/live

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்: http://www.naamtamilar.org/

---
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 - 4380 4084
Category
seeman speech

Post your comment

Comments

Be the first to comment