நிழல்கள் ரவி மனைவி யார் தெரியுமா | nizhalgal ravi wife | Tamil Cinema News Kollywood News Tamil News

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by worldtamiltube
82 Views
நிழல்கள் ரவி மனைவி யார் தெரியுமா | nizhalgal ravi wife | Tamil Cinema News Kollywood News Tamil News

Nizhalgal Ravi is an Indian film and television actor who has performed in Tamil, Malayalam and Telugu films and serials. He started his career in 1980 with the film Nizhalgal. He has acted in 500 films.

Nizhalgal Ravi, an actor in South Indian film industry, started his career under the baton of veteran director Bharathiraja in the Tamil film Nizhalgal which fetched him his sobriquet. He played the role of an aspiring hero who falls in love, a performance which brought him his greatest success, although he has not become a top hero. He has had many character roles including films Vedam Puthithu, Nayakan, Chinna Thambi Periya Thambi, Annamalai, Marupadiyam and Aasai. He portrayed roles such as those of a kind-hearted father, a ruthless villain, or a back-stabber. He dubbed for Amitabh Bachchan for the program Kaun Banega Crorepati in Tamil. He acted in more than 25 movies in Malayalam during the 80s. He acted in director K. Balachander's telefilm Rayil Sneham, which became a hit in the early 90s.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் 'மறுபடியும்'. பாலு மகேந்திரா டைரக்‌ஷனில் எனக்கு நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. 11 வருஷத்துக்கு முன்னாடி ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரைப் பார்த்து என் போட்டோ கொடுத்து உங்கள் டைரக்‌ஷனில் நடிக்கணும்னு சொன்னேன். 11 வருஷம் கழித்து அவர் என்னை 'மறுபடியும்' படத்தில் நடிக்க அழைத்தார். நிழல்கள் ரவியை வித்தியாசமாகக் காட்டினார். எனக்கே என் ஸ்டைல் பிடித்திருந்தது. அப்போதுதான் டைரக்டர் பாலாவை மீட் பண்ணினேன். பாலா சார் எப்படி அப்போது ட்ரெஸ்ஸிங் பண்ணி இருந்தாரோ அதைதான் 'மறுபடியும்' படத்தில் என் ட்ரெஸ்ஸிங்காக பாலுமகேந்திரா வைத்தார். ஏன்னா, பாலா ஜீன்ஸ் பேன்ட் போட்டு சர்ட் போட்டு கையை மடித்து விட்டிருப்பார். அப்படியேதான் என் ட்ரெஸ்ஸிங் இருக்கும்.

ஏ.வி.எம் ராஜன் ஒரு நாள் வாகை ஸ்டூடியோவுக்குக் கூப்பிட்டுப் போனார். யாரைப் பார்க்கப் போறோம்னு எனக்குத் தெரியாது. நேராகப் போனால் சிவாஜி சார் உட்கார்ந்து இருந்தார். அவரைப் பார்த்தவுடன் காலில் விழுந்துவிட்டேன். சிவாஜி சார், 'பேர் என்ன'னு கேட்டார். ’நிழல்கள்’ ரவினு சொன்னேன். ''அதென்ன ’நிழல்கள்’ ரவி, வெயில் ரவினு வெச்சுக்கோ’’னு கிண்டல் பண்ணினார். ''ராஜன் , இந்தப் பையன் மூக்கு முழியுமாய் இருக்கான் இவனையே படத்தில் நடிக்க வைத்துவிடு''னு சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷம். சிவாஜி சாரின் தம்பியாக படத்தில் நடித்தேன். வாய்ஸ் மாடுலேஷன் சிவாஜி சாரிடம்தான் கற்றுக்கொண்டேன். சிவாஜி சாரின் பையன் பிரபு உடனும் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். பிரபு பையன் விக்ரம்பிரபு உடன் 'பக்கா' படத்தில் நடித்திருக்கிறேன். சிவாஜி குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுடனும் நடித்தது எனக்கு மகிழ்ச்சி.

எனக்கு திருமணம் ஆகி ஒரு பையன் இருக்கிறார். சமீபத்தில்தான் அவருக்குத் திருமணம் முடிந்தது. நிறைய பிரபலங்கள் வந்து வாழ்த்தினார்கள். அப்போது என் திருமண வரவேற்பு சென்னையில் நடந்த ஞாபகம் வந்தது. என் திருமண வரவேற்பிற்கு சிவாஜி, கமல் ரஜினி என எல்லோரும் வந்திருந்தார்கள் அப்போதுதான் என் அப்பா வாழ்க்கையில் நான் செட்டிலாகி நல்லா இருக்கிறேன் என்று நம்பினார். என் பையன் அனிபிக்ஸ் என்ற பெயரில் அனிமேஷன் ஸ்டூடியோ வைத்திருக்கிறார். ப்ரீ டைமில் என்னை ஸ்டூடியோவில் பார்க்கலாம். இந்திப் படங்களில் நடித்து வருகிறேன், தொடர்ந்து படங்களில் நடிப்பேன்’’ என்று சொல்லி முடித்தார் நிழல்கள் ரவி.

Source : https://en.wikipedia.org/wiki/Nizhalgal_Ravi
Source : https://ta.wikipedia.org/wiki/நிழல்கள்_ரவி
Category
TamilCinemaNews

Post your comment

Comments

Be the first to comment