மனோரமாவை ஜெயலலிதாவுக்கு பிடித்துப்போனது ஏன்? யார் இந்த ஆச்சி? | Actress Manorama and Jayalithaa

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by worldtamiltube
21 Views
மனோரமா நினைவலைகள்: 5 முதல்வர்களுடன் நடித்த தமிழ் சினிமாவின் ‘ஆச்சி’ குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.

2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று மறைந்த பிரபல நடிகை மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.

சென்னை தியாகராய நகரில் மனோரமாவின் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டிருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தின் மத்தியில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வாகனம் வந்தது.

அக்காலகட்டத்தில் பல மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த முதல்வர் ஜெயலலிதா மிகவும் மெதுவாக நடந்து சென்று வீட்டின் வரவேற்பு பகுதிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த மனோரமாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மிகவும் நெருங்கியவர்களின் திருமண மற்றும் துக்க நிகழ்வுகளில்கூட சில சமயங்களில் ஜெயலலிதா கலந்துகொள்வதில்லை என்ற நிலையில், உடல் நலம் குன்றியிருந்த சமயத்திலும் ஜெயலலிதா வந்தது மனோரமா ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.



Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
BBC News Tamil

Post your comment

Comments

Be the first to comment