சரவணன் மனைவி யார் தெரியுமா | saravanan wife Tamil Cinema News Kollywood News Tamil News Bigg Boss 3

Loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by worldtamiltube
276 Views
சரவணன் மனைவி யார் தெரியுமா | saravanan wife Tamil Cinema News Kollywood News Tamil News Bigg Boss 3

Saravanan is an Indian film actor who has appeared in Tamil language films. He made his acting debut through Vaidhehi Vanthachu (1991), where he portrayed the lead role. He continued to play the lead roles in films throughout the 1990s, later turning into a producer and director for his films. After a sabbatical, Saravanan made a comeback through Paruthiveeran (2007) in a supporting role, and has since continued to play character roles in Tamil films.

சரவணனுக்கு இரண்டு மனைவிகள். முத்த மனைவி பெயர் சூர்யா ஸ்ரீ. முத்த மனைவிக்கு குழந்தை இல்லை. இரண்டாவது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சரவணன் தனது வாழ்வில் நடந்த மறக்க முடியாத சோக சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அதில், தனக்கு இரு மனைவிகள் இருப்பதாகவும், முதல் மனைவி தான் 2ஆவது மனைவிக்கு தாலி எல்லாம் வாங்கி கொடுத்தார்கள் என்றும் கூறினார். அம்மாவுக்காக தான் 2ஆவது திருமணமும் செய்து கொண்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், பலரும் இது குறித்து விமர்சனமும் செய்திருந்தனர்.

சரவணன் பற்றி ஒரு பார்வை:

இவருடன் கல்லூரியில் பயின்ற சூரியஸ்ரீ என்ற மாணவியே இவரது வாழ்க்கைத் துணைவியாக அமைந்துள்ளார். இத்தம்பதிக்குக் குழந்தைகள் இல்லாததால் முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துள்ளார். இவர்கட்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 2003-ஆம் ஆண்டில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்.

சேலம், அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ., தமிழ் இலக்கியம் பயின்றவர் சரவணன். கவிதை எழுதும் ஆற்றல் உள்ளவர். சேலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர். தாயார் செவிலியராக பணியாற்றியவர். பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள். அவர்களில் இரண்டாவது மகன் இவர். 1991-ஆம் ஆண்டு வைதேகி வந்தாச்சு என்ற படத்தில் அறிமுகமான சரவணன் தொடர்ந்து பொண்டாட்டி ராஜ்ஜியம், அபிராமி, மாமியார் வீடு, பெற்றெடுத்த பிள்ளை, நல்லதே நடக்கணும் உள்ளிட்ட 25 படங்களில் 1998-ஆம் ஆண்டு வரை கதாநாயகனாகவே நடித்துள்ளார். அதன் பின் அடுத்த சுற்றில் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘பருத்தி வீரன்’ படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக செவ்வாழை என்ற துணைக் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் பெயர் பெற்றார். இதற்காக பிலிம்ஃபேர், விஜய் விருதுகள் இவருக்குக் கிடைக்கப்பெற்றன. தற்போதும் சரவணன் நடித்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் இவ்வாண்டில் [2019] நடைபெற்று வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இவர் பங்கெடுத்தார். இவர் தாயுமனவன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார் .

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெண்கள் குறித்து சர்ச்சையான விஷங்களை பேசியதால் சரவணன் மீது சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தன.

இதனால் சரவணனை பகிரங்க மன்னிப்பு கேட்க சொன்னதால் சரவணனும் மன்னிப்பு கேட்டார்.

இருப்பினும் அவர் மன்னிப்பு கேட்ட சில நாட்கள் கழித்து சரவணன் பேசிய சர்ச்சை கருத்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டார்.

இதனால் ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை பிக் பாஸ் மீது வைத்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரவணன் எந்த பேட்டியிலும் பங்குபெறவில்லை.

இருப்பினும் சமீபத்தில் சரவணனுக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

அப்போது எடுத்துக்கொண்ட சரவணனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதன் முறையாக சரவணன் பிரபல தனியார் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் சரவணனிடம் பிக் பாஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சரவணன், இந்த 40 நாட்களில் நமது வாழ்க்கையில் இத்தனை மாற்றங்களா என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

சமீபத்தில் நான் அத்தி வரதர் கோயிலுக்கு சென்றேன் அப்போது அங்கு இருந்த ஒரு லட்சம் பேரில் 80 ஆயிரம் பேர் என்னை திரும்பி பார்த்தனர்.

அதை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை. எனக்கு இப்போது ரசிங்கர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

என்னை புரிந்து கொண்டு எனக்காக பாலோவெர்ஸ்சாக மாறிய அனைவர்க்கும் நன்றி என்று கூறியுள்ளார் சரவணன்.

Source : https://en.wikipedia.org/wiki/Saravanan_(actor)
Source : https://ta.wikipedia.org/wiki/சரவணன்_(நடிகர்)

Music Source :
Track: Marin Hoxha - Endless [NCS Release]
Music provided by NoCopyrightSounds.
Watch:
Free Download / Stream: http://ncs.io/Endless
Category
TamilCinemaNews

Post your comment

Comments

Be the first to comment