Bigg Boss Tamil 3 Grand Finale: பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை வென்றார் முகேன்

Bigg Boss Tamil 3 Grand Finale: பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை வென்றார் முகேன்

Bigg Boss Tamil 3 Grand Finale Today Live Updates: பிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பதை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.

 

 

Bigg Boss Tamil Season 3 Finale Updates: பிக் பாஸ் சீசன் 3 இன்று கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பதை அறிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் காணாலாம்.

ஸ்டார் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் 23 ஆம் தேதி தொடங்கியது.  இந்தபாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், சேரன், வனிதா விஜயகுமார், கவிண், தர்ஷன், முகேன், சாண்டி, ஷெரின், லாஸ்லியா உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 105 நாட்கள் கடந்த நிலையில் இன்று 105வது நாள்  நிகழ்ச்சியின் இறுதி நாளாகும். பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிகள்படி போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு தற்போது பிக் பாஸ் வீட்டில், சாண்டி, முகேன்,  லாஸ்லியா, ஷெரின் ஆகிய 4 பேர் உள்ளனர்.

இன்றைய பிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்று அறிவிக்கப்பட உள்ளார். இந்நிலையில்,  பிக் பாஸ் சீசன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் டைட்டிலை வெற்றிகொள்ளப்போகும் அந்த அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

Post your comment

Comments

Be the first to comment